1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (23:23 IST)

"டெல்லி மக்களுக்கு பாகிஸ்தான் இலவச பயணம்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து தற்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியை பிடிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது மிகவும் முக்கியமானது. இதனால் பெண்கள் ஓட்டு ஒட்டுமொத்தமாக ஆம் ஆத்மிக்கே மீண்டும் விழ வாய்ப்பு  இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் டெல்லி மக்களுக்கு கர்தார்புர் இலவச பயணம் வசதி செய்து தரப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள சாகப்கஞ்ச் குருத்வாராவுக்கு இன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் இருவரும் சென்றனர். அங்கு நடந்த பிரார்த்தனையில் இருவரும் பங்கேற்றனர்
 
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாகிஸ்தானின் கர்தார்புரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா செல்வதற்கு டெல்லியில் வசிக்கும் முதியவர்களுக்கு இலவச பயண ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.