1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Free scooters for students says assam cm

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்: அரசின் அதிரடி அறிவிப்பு!

scooters
நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது. 
 
அசாம் மாநிலத்தில் நன்றாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளை ஊக்குவிப்பதற்காக ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் 35.800 நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ரூபாய் 258.9 கோடி மதிப்பில் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என அசாம் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இந்த அறிவிப்பு அசாம் மாநில மாணவ-மாணவிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் என்று அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அதுமட்டும் நடந்திருந்தா இன்னிக்கு நான் முதலமைச்சரா இருந்திருப்பேன்: சரத்குமார்