ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (17:04 IST)

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள்: சென்னை பல்கலைக்கழகம்!

Madras University
அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப் போவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பில் 2015 - 16 கல்வியாண்டிற்கு முன்பாகவும், முதுகலை படிப்பில்  2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் படித்து அரியர் வைத்த மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
 
வரும் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வில் மேற்கண்ட கல்வி ஆண்டில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
இந்த அறிவிப்பு அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva