1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (07:42 IST)

டெல்லியில் கொரோனா 4வது அலை: ஒரே நாளில் 1009 பேருக்கு பாதிப்பு!

corona
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1009 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நான்காவது அலை உருவாக்கி விட்டதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது 
 
இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1009 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு மீண்டும் பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது 
 
முகக்கவசம் அணியாதவர்களுக்கு  500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது