கொரோனாவால் பாதிக்கப்பட்ட மன்மோகன்சிங் டிஸ்சார்ஜ்!
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதும் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் மன்மோகன் சிங் அவர்களின் உடல்நிலை குறித்து அவ்வப்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பதும் அவரது உடல் நிலை சீராக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மன்மோகன்சிங் அவர்கள் பூரண குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உறுதி செய்துள்ளது
இதனை அடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீடு திரும்பி உள்ளதாகவும் இருப்பினும் அவர் வீட்டில் ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது