செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:26 IST)

பார்முக்கு வருமா மும்பை இந்தியன்ஸ்? இன்று ராஜஸ்தானுடன் மோதல்!

ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணி இந்த சீசனில் சொதப்பி வருகிறது.

ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ்தான். ஆனால் இந்த முறை தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பி வருகிறது. இதுவரை நடந்துள்ள 5 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியுடன் மோத உள்ளது. ராஜஸ்தான் அணியும் இதுவரை 5 ல் விளையாடி 2 ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.