வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 நவம்பர் 2023 (08:31 IST)

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை எதிர்த்து 113 வேட்பாளர்கள் போட்டி..!

தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி 119 தொகுதிகளில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் மற்றும் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் அறிக்கையில் மாறி மாறி இலவசங்கள் வழங்கப்படும் என்றும் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் சந்திரசேகர் ராவ் அவர்கள்  போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில் அந்த தொகுதியில் மட்டும் 113 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிடும் இன்னொரு தொகுதியில் 57 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளில் மொத்தம் 4798 பேர் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2098 வேட்பாளர்கள் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி தான் ஏற்படும் என கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva