ஏர் இந்தியா விமான பயணம்....மூக்கில், காதில் ரத்தம் ...பயணிகள் அவதி...

air india
Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (16:48 IST)
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிலிருந்து நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் நான்கு பேருக்கு திடீரென்று மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு நோக்கி ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் காற்றழுத்தப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
 
இதனால் 4 பயணிகளுக்கு மூக்கிலிருந்து தீடீரென்று ரத்தம் கசிந்துள்ளது. மேலும் இதில் பயணம் மேற்கொண்ட 185 பயணிகளுக்கு காது வலியும் ஏற்பட்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில் விமானம் உடனடியாக  தரையிரக்கப்பட்டது. பின்னர் ரத்தக்கசிவு ஏற்பட்ட 4 பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்ததாகவும் தகவல் வெளியாகிறது.காற்றழுத்த பிரச்சனையால்தான் 30 மேற்பட்ட பயணிகளுக்கு காது மூக்கு தொண்டையில் ரத்தக்கசிவு   ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிறது.


இதில் மேலும் படிக்கவும் :