செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2019 (18:36 IST)

மும்பை அட்டாக் போன்று மீண்டும் ஒன்று: இந்தியாவுக்கு வார்னிங்

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் அடுத்தடுத்து சில தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இப்போது அந்த தாக்குதல்கள் தணிந்து அமைதியான சூழல் நிலவுகிறது. 
 
இந்நிலையில், இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா மும்பையில் நடந்த தாக்குதல் போன்று மீண்டும் இந்தியாவில் ஒரு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக பகீர் தகவலை வெலியிட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு, உலகின் பல நாடுகளும் தொடர்ந்து தீவிரவாத பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத தாக்குதலை முடிவுக் கொண்டு வர அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 
சமீபத்தில் மிக மோசமான தாக்குதலை காஷ்மீரில் நாங்கள் சந்தித்தோம். இந்தியாவை சீர்குலைக்க திட்டமிட்டு வரும் தீவிரவாதிகளின் முயற்சி இது. ஆனால் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ள இந்தியா எப்போதுமே தயாராக உள்ளது. 
 
பாகிஸ்தான் ஆதரவு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் பல்வேறு வழிகள் வழியாகவும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கடல் வழியாக தாக்குதல் நடத்த பெரிய அளவில் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பையில் 2008 ஆம் ஆண்டு கடல் வழியாக வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பெரும் தாக்குதல் நடத்தினர். அதேபோல் மீண்டும் ஒரு தாக்குதல் நடக்க வாய்புள்ளதாக அவர் எச்சரித்தும் உள்ளார்.