அதானி குழுமத்துடன் இணைந்தது ப்ளிப்கார்ட்! – காரணம் என்ன?
இந்தியாவில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ப்ளிப்கார்ட் அதானி குழுமத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் விளங்கி வருகின்றன. இந்நிலையில் அமேசான் இந்தியா முழுவதும் சரக்கு கிடங்குகள், தனிப்பட்ட போக்குவரத்து டெலிவரி சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் ப்ளிப்கார்ட் கூரியர், இ காமர்ஸ் நிறுவனங்களுடனான பங்கீட்டின் பெயரில் டெலிவரி சேவையை தொடர்ந்து வந்தன.
இந்நிலையில்தான் தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனம் அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது சேவையை விரிவுப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி முக்கிய நகரங்களில் ப்ளிப்கார்ட்டுக்காக சரக்கு மற்றும் டெலிவரி சேவை மையங்களை உருவாக்க அதானி லாஜிஸ்டிக்ஸ் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஒருங்கிணைப்பால் ப்ளிப்கார்ட் பொருட்கள் விரைவு டெலிவரி உள்ளிட்ட வசதிகளை பெறும் என்றும் கூறப்படுகிறது.