உச்சநீதிமன்றத்தில் 50% பேருக்கு கொரோனா! – நீதிமன்றம் திடீர் அறிவிப்பு!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பகுதி நேர, இரவு நேர ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிபவர்களில் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி நீதிமன்ற வழக்குகளை நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி வழியாக விசாரிப்பார்கள் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.