வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 3 மே 2023 (14:43 IST)

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட சூப்பர் ஸ்டார்..வைரல் வீடியோ

shah rukh khan
மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, அதை ஷாருக்கான் கோபத்தில் தட்டிவிட்டார்.
 

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பதான். சல்மான் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம் ரூ.1000 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.

தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் என்ற படத்தில் நடித்துள்ளார்,. இப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில்,  இன்று காலை மும்பை நகரில் உள்ள மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய  நடிகர் ஷாருக்கான் வெளியே வரும்போது, அவரது ரசிகர் ஒருவர் தன் செல்போனின் செல்ஃபி எடுக்க முயன்றார்.

இதில், கோபமடைந்த ஷாருக்கான் அவரை தள்ளிவிட்டார். அந்த ரசிகரின் செல்போன் கீழே விழுந்தது. அந்த நபரை முறைத்து பார்த்த ஷாருக்கான் தன் காரை நோக்கிச் சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.