1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (22:45 IST)

குடோனில் பதுக்கி வைத்த பட்டாசுகள் வெடித்து விபத்து..

Fire
மத்திய பிரதேச மாநிலம்  மொரேனா மாவட்டத்தில் உள்ள பன்மோர் நகரில் உள்ள ஒரு குடோனில் பட்டாசுகள் பதுக்கப்பட்ட நிலையில் இன்று வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள  மொரேனா மாவட்டத்தில் உள்ள பன்மோர் நகரில் உள்ள ஒரு குடோனில் பட்டாசுகள் பதுக்கப்பட்ட நிலையில் இன்று வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது

இந்த விபத்தில் சுமார் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளில் புதைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 மேலும், இந்த வெடித்து, பட்டாசு வெடித்ததாலா, எரிவாயு வெடித்ததாலா என்று விசாரித்து வருவதாக மொரோனா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தற்போது இடிபாடுகளை அகற்ற வேண்டி சிலரை அங்கு அனுப்பி இதற்காக வேலைகளை செய்ய உத்தரவிட்டுள்ளார் காவல்துறை கண்காணிப்பாலர் ராஜேஷ்  சாவ்லா.

Edited by Sinoj