ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (21:39 IST)

இறந்த சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பேருந்தில் சென்ற உறவினர்

மத்திய பிரதேச மாநிலம் சட்டார்பூரில் இறந்த சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பேருந்தில் உறவினர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மா நிலத்தில் முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சட்டார்பூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் 4 வயது சிறுமி உயிரிழந்தார், அப்போது ஆம்புலன்ஸ் வசதியின்ரி உறவினர்கள் சிறுமியின் உடலை தோளில் சுமந்து சென்றனர்.

இதேபோல் மற்றொரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.  அம் மா நிலத்தில் உள்ள பதான் என்ற பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் உடல் நலக்குறைவால் சட்டார்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.  இந்த நிலையில், ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் உறவினர் சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பேருந்தில் தூக்கிச் சென்றார்.

இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் மா நில அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Edited by Sinoj