செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2024 (14:23 IST)

2025 ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை: மாசு கட்டுப்பாட்டு குழு

crackers
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.
 
அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில், அதனை அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ச்சியான விழாக்களில் பட்டாசு வெடிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில், காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, பட்டாசு உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் விநியோகம் செய்தல் உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசு செயல்களுக்கும் ஜனவரி 1ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.

டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran