வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (10:26 IST)

எல்லாப் புகழும் கம்பீருக்கே… ஆட்டநாயகன் நிதீஷ்குமார் நெகிழ்ச்சி!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் இரண்டாவது பொட்டி நேற்று டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி பே 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. இந்தியாவின் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இருவரும் அபார அரைசதம்  முறையே 74 மற்றும் 53 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து ஆடிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் நிதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருதைப் பெற்ற அவர் பேசும்போது “இந்த தருணம் பெருமையாக உள்ளது. நான் நன்றாக விளையாடக் காரணமே பயிற்சியாளர் கம்பீரும், கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும்தான். அவர்கள் என்னை பயமின்றி விளையாட வைத்தார்கள். முதலில் நான் கொஞ்சம் தடுமாறினேன். பின்னர் மகமதுல்லா வீசிய நோ பால் திருப்புமுனையாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.