புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2024 (15:01 IST)

கொலை செய்யப்பட்ட டெல்லி டாக்டர்... விசாரணையில் திடுக் தகவல்..!

டெல்லியில் டாக்டர் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த டாக்டர் நர்சுடன் தொடர்பில் இருந்ததாக நர்சின் கணவர் சந்தேகித்ததாகவும், இதைத் தொடர்ந்து சிறுவர்களை பயன்படுத்தி அந்த டாக்டரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் நேற்று, டாக்டர் ஜாவேத் என்பவரை இரண்டு சிறுவர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படும் நிலையில், அதில் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவரிடம் விசாரணை நடத்திய போது, டாக்டர் ஜாவேத் அதே மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுடன் தொடர்பில் இருந்ததாகவும், நர்சின் கணவர் இதைக் குறித்து சந்தேகப்பட்டதாகவும், நர்சின் மகளை காதலித்து வந்த சிறுவனிடம், “டாக்டர் ஜாவேதைப் சுட்டுக் கொன்றால், உனக்கு மகளை திருமணம் செய்து வைப்பேன்” என்று நர்சின் கணவர் வாக்குறுதி அளித்ததால், அந்த சிறுவன் டாக்டரை சுட்டுக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், அந்த சிறுவனுக்கு நர்சின் கணவர் பணம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நர்சின் கணவரை அடுத்த கட்டமாக விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.