வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (16:45 IST)

3 நாட்களாக வயிற்றுக்குள் குடியிருந்த கரப்பான் பூச்சி! - டெல்லி இளைஞரை காப்பாற்றிய மருத்துவர்கள்!

Cockroach

டெல்லியில் இளைஞர் வயிற்றுக்குள் உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் நடந்துள்ளது.

 

 

டெல்லியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் சாலையோர கடையில் சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் நாளாக, நாளாக வலி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

வயிற்று வலி தாங்க முடியாமல் அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வயிற்றை ஸ்கேன் செய்தபோது அவரது சிறுகுடலில் கரப்பான்பூச்சி ஒன்று உயிருடன் இருந்தது தெரிய வந்துள்ளது.

 

உடனடியாக இளைஞருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 3 செண்டி மீட்டர் நீளமுடைய அந்த கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றினர். கரப்பான்பூச்சி இளைஞரின் சிறுகுடலுக்குள் சென்றது எப்படி என்பது குறித்து விளக்கமளித்த மருத்துவர்கள் அவர் சாப்பிடும்போதோ அல்லது இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோதோ வாய் வழியாக கரப்பான்பூச்சி உள்ளே சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K