புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (09:36 IST)

இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: மீட்பு பணிகள் தீவிரம்

மஹாராஷ்டிராவில் இன்று அதிகாலை 4 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பிவண்டி என்னும் பகுதியில் ஒரு 4 மாடி குடியிருப்பு கட்டிடம் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது பற்றி தகவலறிந்த அதிகாரிகள், பொதுமக்களை வெளியேறும்படி கூறினர்.

அதன்படி, அங்கு வசித்தவர்களில் பலர் தங்களது உடமைகளை எடுத்துகொண்டு வெளியேறினர். இந்நிலையில் இன்று அதிகாலையில் சிலர் தங்கள் பொருட்களை எடுப்பதற்காக உள்ளே சென்றனர், அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் உள்ளே சென்றவர்கள் அனைவரும் சிக்கி கொண்டனர்.

இதன் பிறகு மீட்பு குழுவினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீடனர். 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.