வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (13:07 IST)

கோரிகான் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

GoregaonFire -maharashtra
கோரிகான் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஏக் நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தின் மும்பை கோரிகான் பகுதியில்  உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிகி 7 பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மீட்புப் பணிகளின்போது, தீக்காயங்களுடன் 46 பேர் மீட்கப்படு மருத்துவமனைககளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  7 பேர் பகியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், ஜெய் பவானி கட்டடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியதாகவும், இது அருகில் உள்ள கட்டங்களுக்கும் இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'கோரிகான் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் 'என்று முதல்வர் ஏக் நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மேலும், ' காயமடைந்த அனைவருக்கும் அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.