வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (14:19 IST)

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

Arrest
பெற்ற மகளையே, ஆறு ஆண்டுகளாக தந்தை பாலியல் பலாத்காரம் செய்து  கர்ப்பமாக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தைக்கு 101 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
கேரளாவைச் சேர்ந்த முகம்மது என்ற 43 வயது நபர் ஒருவர், தனது 10 வயது மகளைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 10 வயது முதல் 16 வயது வரை மகளுக்கு போதைப்பொருள் கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். 
 
சிறுமிக்கு 16 வயதாக இருந்தபோது பலாத்காரம் தொடர்ந்ததால் கர்ப்பமானார். அதன் பிறகு சிறுமி தந்தையால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்து, சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. 
 
இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தனது மகளிடம் முகம்மது கூறியுள்ளார். ஆனாலும், சிறுமியிடம் போலீசார் மருத்துவமனையில் வாக்குமூலம் பெற்றனர். இந்த வழக்கில் சிறுமியின் தந்தைக்கு 101 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
தனது மகள் மீதான பாலியல் வன்கொடுமையை முகம்மது நியாயப்படுத்தினார். ஆனால், இதை சாதாரண பாலியல் குற்றமாக பார்க்க முடியாது என்றும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மீது கருணை காட்ட முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

 
இதுபோன்ற குற்றங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதால், அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.