வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (14:51 IST)

உண்மையான பட்ஜெட் ஜூலையில் வரும், அதில் மக்கள் பயனடைவர்; பரூக் அப்துல்லா

farooq-abdullah
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உண்மையான பட்ஜெட் ஜூலை மாதம் வரும் என்றும் அதில் மக்கள் பயனடையும் வகையில் பல அம்சங்கள் இருக்கும் என்றும் இந்தியாவின் சுற்றுலா பெருகும் வகையில், தொழில்கள் வளரும் வகையில் நாடு முன்னேறும் வகையில் புதிய பட்ஜெட் உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.  
 
நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பின்னரும் அவர்  பட்ஜெட்டுகளை தாக்கல் செய்வாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran