வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (14:20 IST)

பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றி அறிவிப்பு இல்லை..! பொதுமக்கள் ஏமாற்றம்..!

petrol
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால் நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
எரிபொருட்களின் விலை பத்து ரூபாய் வரை குறைக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று தாக்கலான பட்ஜெட்டில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.  இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 
இது இடைக்கால பட்ஜெட் என்பதால் அனைத்தையும் அறிவிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.