ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (12:38 IST)

ஜூலையில் நாங்களே முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்வோம்...! பாஜக எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம்

nirmala sitaraman
ஜூலையில் நாங்களே முழு  பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என நிதியமைச்சர் நிர்மலா சீமான் சீதாராமன் கூறியதற்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
 
கடந்த 2014-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் மூன்றாவது முறையாக வெற்றி பெற பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது.
 
இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

 
modi
“மீண்டும் மோடி”
 
வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜூலையில் நாங்களே முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அப்போது பிரதமர் மோடி உள்பட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.