1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (14:26 IST)

ஹேமந்த் சோரன் கைது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Hemant Soran arrested
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்தது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு முதல்வர்  மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நிலமோசடி, நிலக்கரி  சுரங்க மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பியும் அம்மா நில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.

அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.

ஆளும் ஜார்ககண்ட் முக்தி மோர்சா கட்சி எம்.எல்.ஏக்கள் நேற்றிரவு  அம்மாநில கவர்னரை சந்தித்து பேசினர். அப்போது , முதல்வர் ஹேமந்த் சோரனின் ராஜினாமா நடித்ததை அவர் ஏற்றுக் கொண்டதாகவும், ஜார்கண்ட் முதல்வராக சாம்பை சோரனை முதல்வராக தேர்வு செய்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து  முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு இரவு 8:30 மணிக்கு கைது செய்தனர்.  இதைக் கண்டித்து ஜேஎம்எம் கட்சியின் மாநிலம் முழுவதும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், ஹேமந்த் சோரன் கைது மூலம் பாஜக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தெரியவந்துள்ளது. பழங்குடியின சமூதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை விசாரணை அமைப்பு மூலம் துன்புறுத்துவது தரம் தாழ்ந்த நடவடிக்கை. பாஜக அதிகார அத்துமீறமில் ஈடுபட்டுள்ளதை இந்த கைது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.