பாஜக அலுவலகம் கட்ட நடப்பட்ட அடிக்கல்லை பிடுங்கி எறிந்த விவசாயிகள்!

bjp office
siva| Last Updated: திங்கள், 14 ஜூன் 2021 (17:07 IST)
bjp office
பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் காட்டுவதற்காக நடப்பட்ட அடிக்கல் கல்லை சில மணிநேரத்தில் விவசாயிகள் பிடிங்கி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாஜக இயற்றிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர் என்பதும் இந்த போராட்டத்திற்கு இன்னும் முடிவு கிடைக்காமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கும் விவசாயிகள் ஹரியானா மாநிலத்தில் புதிதாக அலுவலகம் கட்டுவதற்காக பாஜகவினர் நட்டகல்லை பிடுங்கி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஹரியானா மாநிலத்தில் ஹஜார் என்ற பகுதியில் பாஜக புதிய அலுவலகம் கட்டுவதற்காக இன்று காலை அடிக்கல்லை நட்டது. இந்த அடிக்கல் நட்ட ஒரு சில மணி நேரங்களில் அங்கு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் அந்த அடிக்கல் கற்களை பிடுங்கி எறிந்தனர். இதனையடுத்து விவசாயிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன


இதில் மேலும் படிக்கவும் :