செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (12:50 IST)

மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்… ப சிதம்பரம் கருத்து!

தமிழகத்தில் 35 நாட்களுக்குப் பின்னர் இன்று டாஸ்மாக் கடைகள் 27 மாவட்டங்களில் திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இன்று ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை  5 மணிவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பொதுமக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக பாஜகவினரும் அதிமுகவினரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப சிதம்பரம் ‘ துரதிர்ஷ்டவசமாக இன்று நாடு முழுவதும் குடிக்கும் பழக்கம் உள்ளது. பெண்கள் கூட குடிக்க ஆரம்பித்துள்ளனர். நான் மது அருந்துவது இல்லை என்றாலும் அருந்துபவர்களையும் தீயவர்கள் என்று சொல்ல முடியாது. மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். அதனால் மதுக்கடைகளை திறந்துதான் ஆகவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.