வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:49 IST)

நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு: தமிழகத்தில் தாக்கமா?

delhi -farmers protes
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று விவசாயிகள் நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. 
 
கடந்த மூன்று நாட்களாக விவசாயிகள் டெல்லி அருகே போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில் நேற்று விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசுக்கு நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இன்று நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் மத்திய தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முழு அடைப்புக்கு ஒரு சில மாநிலங்களில் ஆதரவு இருந்தாலும் தமிழகத்தில் வழக்கம்போல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Siva