மார்ச் 26 ஆம் தேதி… நாடுதழுவிய போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு!
டெல்லியில் வேளாண் மசோதா சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண்மை மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஆரம்பித்து 100வது நாட்களைக் கடந்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மார்ச் மாதம் 26 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.