1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (17:10 IST)

அமெரிக்க மாத இதழில் டெல்லி போராட்டம்! – வைரலாகும் அட்டைப்படம்!

பிரபல அமெரிக்க மாத இதழான டைம் பத்திரிக்கையில் டெல்லி விவசாயிகள் போராட்டம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாநில விவசாயிகளும் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவுகள் எட்டப்படாத நிலையில் தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை தங்களது மார்ச் மாத இதழின் அட்டைப்படத்தில் டெல்லியில் போராடிவரும் பெண் விவசாயிகள் படத்தை வெளியிட்டுள்ளது. இந்திய உள் விவகாரங்களில் பிறநாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என இந்திய அரசு கேட்டுக்கொண்டிருந்த நிலையில் இந்த அட்டைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.