1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (08:07 IST)

மோடி பதவியேற்று 7 ஆண்டுகள்… கருப்பு தினமாக அறிவித்த விவசாயிகள்!

டெல்லியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள விவசாய சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹர்யானா விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் அவர்களுடன் மத்திய அரசு நடத்திய அனைத்து விதமான பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்நிலையில் நாளையோடு அவர்கள் போராட்டத்தை தொடங்கி 6 மாதம் மற்றும் பிரதமராக மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் ஆவதால் அந்த தினத்தை கருப்புதினமாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.