1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 மே 2021 (17:07 IST)

பாதிவிலையில் ஈஸ்வரன்… அதுவும் கூட இல்லாத சக்ரா- அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் விஷாலின் சக்ரா ஆகிய இரண்டு படங்களுக்கும் தொலைக்காட்சி உரிமம் விற்பதில் சிக்கல் எழுந்தூள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் படத்தோடு வெளியானது ஈஸ்வரன் திரைப்படம். சிம்பு நடிப்பில் மிகக் குறைந்த நாட்களில் உருவான படம் என்ற பெயரோடு வெளியானது. வெளியீட்டுக்கு முன்னர் ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. அப்போதே படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நல்ல விலை வந்தது. ஆனால் படக்குழு அதிக விலை சொன்னதால் பிஸ்னஸ் நடக்கவில்லை.

ஆனால் படம் வெளியாகி பிளாப் ஆனதால் அதன் பின்னர் யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஒரு முன்னணி நிறுவனம் அடிமாட்டு விலைக்கு கைப்பற்றியுள்ளதாம். ஆனால் விஷாலின் சக்ரா படத்துக்கு அந்த ஆபர் கூட கிடைக்கவில்லையாம். இப்போது வரை அந்த படம் விற்கப்படாமல்தான் உள்ளதாம்.