வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (18:36 IST)

2.0 படத்திற்கு கிடைத்த ’முதல் வெற்றி’ : ரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்‌ஷன் ஆகியோர் நடிப்பில் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ள 2.0 படத்தினை லைகா நிறுவனம் லைகா நிறுவனம் மிகபிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளது.
அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தினை  அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .அதில் மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை யாரும் எந்த இணையதளத்திலும் வெளியிடக்கூடாது என்று 2000 இணையதள முகவரிகளை தாக்கல் செய்து லைகா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட12, 567 இணையதளங்களில் வெளியிட இன்று தடை வித்துள்ளது .மேலும் இப்படத்தை சட்டவிரோதமாக பதிவேற்றக்கூடாது என இணையதள சேவை நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 2.0 படத்திற்குக் கிடைத்த வெற்றியாக இதை நினைத்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடிவருகிறார்கள்.

அதனால் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.