1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (08:52 IST)

சாமி குறி சொன்னதாக கள்ளக்காதலியை வெட்டி, எரித்துக் கொன்ற இளைஞர்! – சேலத்தில் கொடூர சம்பவம்!

crime
சேலத்தில் சாமியாடும் இளைஞர் ஒருவர் சாமி குறி சொன்னதாக சொல்லி தனது கள்ளக்காதலியை கொடூரமாக வெட்டி, எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சுகுணா. இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சென்னையில் ஒரு மருத்துவமனையில் பணியாளாக வேலை பார்த்து வந்த சுகுணாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கொல்லிமலை பகுதியை சேர்ந்த வல்லரசு என்ற 24 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் சுகுணா தனது குழந்தைகளை தாயார் வீட்டில் விட்டுவிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமத்தன்காடு பகுதியில் விவசாய தோட்டம் ஒன்றில் வல்லரசுடன் சில மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் குழந்தைகளை பார்த்து விட்டு வந்த சுகுணாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டுள்ளது. வல்லரசு சாமியாடும் பழக்கம் கொண்டவர். ஒருமுறை சாமி கும்பிட அவர் வாங்கி வந்த முட்டை கெட்டு போயுள்ளது. இதன்மூலம் சுகுணா தன்னை விட்டு போய்விடப்போவதாக பயந்த அவர் சுகுணாவை அரிவாளால் வெட்டிக் கொன்றதுடன், நண்பர் ஒருவர் உதவியுடன் சுகுணா உடலை தீ வைத்து எரித்தும் உள்ளார்.

ஆனால் சரியாக எரியாமல் கிடந்த சுகுணாவின் உடலை கண்ட ஊரார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வல்லரசு பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி தகவல்களை வல்லரசு போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K