1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (10:47 IST)

அக்காவையும், காதலனையும் கண்டதுண்டமாக வெட்டிய தம்பி! – மதுரையில் கொடூரம்!

IMG-20240131-WA0053
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்திபெருமாள் மகன் சதீஷ்குமார்(28). கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார்.


 
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அழகுமலை என்பவரது மகள் மகாலட்சுமியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும்  எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மகாலட்சுமி வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர்.

திருமணம் செய்து கொடுத்த ஒரு வாரத்தில் மகாலட்சுமி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோர் வீட்டிற்கு திரும்ப வந்து விட்டார். அதன் பின்னர் தனது காதலன்  சதீஷ்குமாரிடம் மகாலட்சுமி அடிக்கடி போனில் பேசி உள்ளார். இந்த விபரம் தெரிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் வயது (20) இருவரையும்  கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து கொம்பாடியில் தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் செல்லும்போது வழிமறித்த பிரவீன்குமார் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டியதில் தலை துண்டானது.

துண்டான தலையை நாடக மேடையில் வைத்து விட்டு ஆத்திரம் தீராத பிரவீன்குமார் நேராக வீட்டிற்கு சென்று அக்கா மகாலட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்தார் அந்த சமயம் தடுக்க வந்த தாய் சின்ன பிடாரியின் கையை துண்டாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

 
இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் கைதுண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, கொலை செய்ய பட்ட இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தகவல் அறிந்து சற்று நேரத்தில்  திருமங்கலம் சரக டிஎஸ்பி வசந்தகுமார் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் பார்வையிட்டு கொலை செய்து தப்பி ஓடிய பிரவீன்குமாரை 2 தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் சற்று நேரத்தில்   பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து இந்த கொலை செய்தவரும் கொலை செய்யப்பட்டவரும் இருவேறு சமூகம் என்பதால் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.