வியாழன், 13 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மார்ச் 2025 (09:52 IST)

5 கோடி கடன் பிரச்சினை! பிள்ளைகளுக்கு விஷம் வைத்து குடும்பத்தோடு தற்கொலை!

rat poison

சென்னையில் கடன் தொல்லையால் மருத்துவர் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள 7வது சாலையில் வசித்து வந்தவர் மருத்துவர் பாலமுருகன். இவரது மனைவி சுமதி வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

சமீபமாக பாலமுருகன் - சுமதி தம்பதி அதீத கடன் சுமையில் சிக்கி இருந்ததாக தெரிகிறது. சுமார் ரூ.5 கோடியளவில் கடன் பிரச்சினையில் அவர்கள் சிக்கி இருந்ததால் தீராத மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

 

அதனால் தனது மகன்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த அவர்கள், தாங்களும் அதை சாப்பிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். 

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நால்வரின் உடல்களையும் கைப்பற்றிய திருமங்கலம் போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K