தவெக மாவட்ட செயலாளர்களின் 6ஆம் கட்ட பட்டியல் இன்று வெளியீடு.. பனையூர் அலுவலகத்தில் விஜய்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 6ஆம் கட்ட பட்டியலை விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் வெளியிடுகிறார்.
பெரம்பலூர், தர்மபுரி, சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான நிர்வாகிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அறிவிக்கிறார்.
(மாதவரம், திருவிக நகர், திருவொற்றியூர், பூந்தமல்லி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பெரம்பலூர், உசிலம்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களுக்கு அறிவிக்கிறார் விஜய்)
தமிழக வெற்றிக் கழகத்திற்கு 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்படனர். இதில் அடுத்த கட்டமாக இன்று 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்.
மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
Edited by Siva