1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (17:14 IST)

கோட்சேவின் சந்ததியினரால் சட்டம் ஒழுங்கை சீர்குலைகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு..!

கோட்சேவின் சந்ததியினரால் கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.  
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 108 அடி உயர கம்பம் நட்டு அதில் அனுமன் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
தேசியக்கொடியை தவிர வேறு கொடியேற்ற அனுமதி இல்லை என போலீசார் அதை அகற்றிய போது பெரும் பிரச்சனையாகியது என்பதும் இதனால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் அனுமன் கொடி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் இன்று மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா ’மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 
 
 
Edited by Mahendran