திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:39 IST)

இந்தியாவில் புற்றுநோய், கல்லீரல் போலி மருந்துகள்!? – மாநில அரசுகளுக்கு டிசிஜிஐ எச்சரிக்கை!

Injection
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட போலி புற்றுநோய் மற்றும் கல்லீரல் மருந்துகள் இந்தியாவில் நுழைந்துள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.



இந்தியாவில் புற்றுநோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் முக்கியமானது அட்செட்ரிஸ் மற்றும் டிஃபைடெலியோ எனப்படும் மருந்துகள். சமீபத்தில் லண்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட மருந்து மேற்கண்ட மருந்துகள் பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மேற்குறிப்பிடப்பட்ட மருந்துகளை கொண்ட பெட்டிகளில் தோரயமாக சில சாம்பிள்களை எடுத்து சோதித்து பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் வரும் மருந்துகளில் இந்த போலிகளும் கலக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை கண்டறியும் முயற்சியில் டிசிஜிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Edit by Prasanth.K