1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (11:29 IST)

”தலித் மருமகன் உள்ளே வரக்கூடாது” ..கோவிலை பூட்டிய கிராமத்தினர்

மத்திய பிரதேசத்தில் கோவிலுக்குள் திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பது போன்ற செய்திகள் இன்னும் இந்தியாவின் பல கிராமங்களில் இருந்து வெளிவந்துக் கொண்டு தான் இருக்கின்றன. நவீனத்துக்கு மாறினாலும் இன்னும் தீண்டாமையை மட்டும் மக்கள் விட்டுவிடவில்லை.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், பர்ஹன்பூரை சேர்ந்த சந்தீப் கவேலே என்ற தலித் இளைஞர் கோயிலுக்குள் திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் கோவில் கதவுகளை மூடியுள்ளனர். மேலும் சந்தீப்பிடம் திருமணத்திற்கான உரிய சட்ட அனுமதி இருந்தும் அங்கிருந்த கிராமத்தினர் கோவிலுக்குள் திருமணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என துணைக்கோட்ட அதிகாரி காசிராம் படோல் தெரிவித்துள்ளார். மேலும் புகார் அளித்த தலித் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவலர்கள் அறிவித்துள்ளனர்.