திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (15:36 IST)

எர்ணாகுளம் - தாம்பரம் ஆரியங்காவில் நிறுத்தப்படும்: ரயில்வே அறிவிப்பால் சபரிமலை பக்தர்கள் மகிழ்ச்சி

Train
எர்ணாகுளம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் இனிமேல் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. 
 
எர்ணாகுளம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளத்தில் திங்கள்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, நியூ ஆரியங்காவுக்கு மாலை 6.45 மணிக்கும், ஆரியங்காவு ஹால்ட்டுக்கு மாலை 6.51 மணிக்கும் சென்றடையும். அதேபோல் ஆரியங்காவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும். 
 
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, ஆரியங்காவு ஹால்ட்டை மறுநாள் அதிகாலை 5.01 மணிக்கும், நியூ ஆரியங்காவு நிலையத்தை அதிகாலை 5.07 மணிக்கும் அடையும். அன்றையநாள் நண்பகல் 12.30 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். 
 
இந்த நிலையில் எர்ணாகுளம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் சபரிமலை பக்தர்களின் வசதிக்காக ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சபரிமலை பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran