செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (15:29 IST)

தாம்பரம் நகைக்கடையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை: 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது!

tambaram
தாம்பரம் நகைக்கடையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை: 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது!
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 சிறார்கள் கைவரிசை காட்டிய நிலையில் அந்த குற்றவாளிகளை தமிழக போலீசார் 3 மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.
 
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் கொள்ளையடிக்கப்பட்ட ₹1.5 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 
 
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் ஒன்றரை கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை திருடிய 16 வயது சிறுவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும்,  சிசிடிவி உதவியுடன் சில மணிநேரங்களில் திருடர்களை கண்டுபிடித்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran