திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (11:06 IST)

சட்டையே போடாம வந்து ஆட்டைய போட்ட திருடன்! – நகைக்கடை சிசிடிவி காட்சிகள்!

CCTV
தாம்பரம் அருகே உள்ள நகைக்கடையில் நடந்த கொள்ளை குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கத்தில் செயல்பட்டு வந்த ப்ளூஸ்டோன் என்ற நகைக்கடையில் நேற்று புகுந்த கொள்ளையன் ஒருவன் அங்கு ஷோ கேஸில் வைத்திருந்த தங்க, வைர நகைகளை திருடியுள்ளான். மேலும் லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் அடித்ததால் தப்பியுள்ளான்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸார் உடனடியாக சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து சில மணி நேரத்தில் கொள்ளையடித்த வடமாநில இளைஞரை டீசர்ட்டை அடையாளமாக வைத்து கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்து அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டையை கழற்றி முகத்தை மறைத்து கொண்டு இளைஞர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K