1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (09:50 IST)

அக்.10-க்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வு - ஏஐசிடிஇ!

அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வை நடத்தி முடிக்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. 

 
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்லூரிகள் முழுமையாக செயல்படாமல் உள்ளன, இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 16 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என புதுச்சேர்யில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு முதல்வர் முடிவு செய்வார். ஆனால் திட்டமிட்டபடி ஆகஸ்டு 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வை நடத்தி முடிக்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.