1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (18:08 IST)

அரியர் தேர்வை ரத்து என்ற தமிழக அரசின் அறிவிப்பு தவறானது: ஏஐசிடிஇ தலைவர் அறிவிப்பு

அரியர் தேர்வை ரத்து என்ற தமிழக அரசின் அறிவிப்பு தவறானது
பொறியியல் படிப்புகளுக்கு அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு செல்லாது என ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கலை அறிவியல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் மற்றும் பொறியியல் இளநிலை முதுநிலை படிக்கும் மாணவர்கள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தப்பட்டு இருந்தால் அனைத்து தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் இதனை அடுத்து கட்டணம் செலுத்தி இருந்த அத்தனை மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது 
 
இதுகுறித்து விரைவில் அரசாணை வெளிவரும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இந்த நிலையில் அரியர் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்ப கழகம் எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தது.
 
அந்த மின்னஞ்சல் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தமிழக அரசுக்கு தெரிவித்தார். இருப்பினும் உயர்கல்வித்துறை கேபி அன்பழகன் அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து எந்த இமெயிலும் வரவில்லை என்று தெரிவித்தார் 
 
இந்த நிலையில் தற்போது அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுதே என்பவர் பொறியியல் படிப்புகளுக்கு அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என்று தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது ஏஐசிடிஇ நிலை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றும் ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுதே கூறியுள்ளார்.