போலி அமேசான் கால் செண்டர்; அமெரிக்கர்களுக்கு விபூதி அடித்த டெல்லி கும்பல்!
டெல்லியில் போலியாக அமேசான் கால் செண்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பணம் பறித்த கும்பலை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் வளர்த்துள்ள தற்போதைய காலக்கட்டத்தில் பணபரிமாற்றம் எளிதாகியுள்ள அதேசமயம் சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்தபடி அமெரிக்கர்களை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சுல்தான்பூர் பகுதியில் அலுவலகம் அமைத்து 26 பேர் கொண்ட குழு போலி அமேசான் கால் செண்டராக நடித்து அமெரிக்கர்களுக்கு கால் செய்து அவர்களது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறி அதன்மூலம் பணம் பறித்ததாக தெரிய வந்துள்ளது.
போலி அமேசான் கால் செண்டர் நபர்களை கைது செய்துள்ள டெல்லி போலீஸார் அவர்களிடம் இருந்த செல்போன், கணினி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.