சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு..

Arun Prasath| Last Modified வெள்ளி, 11 அக்டோபர் 2019 (17:52 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப சிதம்பரத்தை, நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு தாகல் செய்துள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்து மாதம் 21 ஆம் தேதி, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சிபிஐ, காவலில் எடுத்து விசாரித்தது.

அதன் பின்பு அவரை திகார் சிறையில் அடைத்த நீதிமன்றம், அவருடைய காவலை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை, ப சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 14 ஆம் தேதி ப சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :