வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (13:03 IST)

குழந்தைகளைக் காவு வாங்கும் மூளைக்காய்ச்சல்:பீதியில் பீகார் மாநிலம்

பீகார் மாநிலம், முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 94 ஆக உயர்வு.
கடந்த சில நாட்களுக்கு முன், பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில், பல குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.

பின்பு, அக்குழந்தைகளுக்கு முசாஃபர்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைந்திருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மூளைக்காய்ச்சலால் உயிரிழப்பு அதிகமாகி வருவது, முசாஃபூர் பகுதியிலுள்ள மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.