ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (12:26 IST)

கிடுக்கு பிடி பிடித்த ஆக்டோபஸ்:திணறிய நீச்சல் வீரர்

ஜப்பானில் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை, ஆக்டோபஸ் ஒன்று இழுத்து செல்ல முயன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன

ஜப்பான் கார்ரொ தீபகற்ப பகுதியில் ஆழ்கடலுக்குள் நீச்சல் வீரர்கள் சிலர் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆக்டோபஸ் ஒன்று, ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த நீச்சல் வீரர் ஒருவரின் காலை பிடித்து இழுத்தது.

ஆனால் அந்த வீரர் விடாமுயற்சியை கைவிடாமல் தொடர்ந்து ஆக்டோபஸிடமிருந்து தன்னை விடுவிக்க நீந்திகொண்டே இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அந்த நீச்சல் வீரர், கையில் அகப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பொருளை வைத்து ஆக்டோபஸை தாக்கியிருக்கிறார். பின்பு ஆக்டோபஸ் அந்த நீச்சல் வீரரின் காலிலிருந்து தன்னுடைய பிடியைத் தளர்த்திக் கொண்டு பாறைகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கடலுக்கடியிலிருந்த சக நீச்சல் வீரர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.