1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (09:01 IST)

மனதை ரணமாக்கும் கோழிக்கோடு விமான விபத்து புகைப்படங்கள்!

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 
 
கொரோனா காரணமாக இப்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிரங்கும் போது பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்தது.
 
இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இது தொடர்பாக அவசர உதவி எண்களை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அவை, 
 
Airport Control Room - 0483 2719493
Malappuram Collectorate - 0483 2736320
Kozhikode Collectorate - 0495 2376901
 
மேலும், இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதை காணும் போதே மனம் கனக்கிறது.